உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி.
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி.
உயிருடன் சாகிறேன் பாரடி...........
காணாமல் போனாலும் உன் காதல் சாபமா?
நீ கரையைக் கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஓடமா?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி.
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதி வரை.....
கண்களிலே தூவி விட்டாய் மண் துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது. அது வரமாக நீ தந்தது.
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும் என் துணையாக வருகின்றது.
ஆராத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?
இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உயிருடன் சாகிறேன் பாரடி........
கடலினிலே விழுந்தாலும் கரையிறுக்கும்.
காதலிலே விழுந்த பின்னே கரையில்லையே...
இந்தக் காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ.
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே விட்டாயே எங்கே செல்ல
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி.
அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதானால் தேரடி உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி.
Tuesday, December 28
Friday, December 10
உதற நினைப்பது நியாயமா?
நீ கூறிய ஒற்றை வார்த்தையில்
நொருங்கிப்போனதென் இதயம்...
பல மைல் தாண்டி – நான்
தனிமையில் நின்றாலும்............
உலகமாய் தோன்றிய
என்னுயிர்த் தோழனின் - ஒற்றை வார்த்தை
உயிர்கொல்லி நோயானது.
உன் தனிமைப் பொழுதுகளில்
உற்ற தோழியாய் நின்றவளை
உனக்கென ஒருத்தி வந்தவுடன்
உதற நினைப்பது நியாயமா?
Wednesday, December 1
ஆட்கொல்லி நோயின் விஸ்வரூபம். AIDS
ஒரு காலத்தில் சிவப்பு என்ற நிறத்திற்கான உவமை உழைத்து உழைத்து சிவந்து போன எம்மூதாதையர்களின் கைகளை கூறுவர். அவர்களின் புனிதத்தன்மையும் குறித்த நிறத்தில் புதைந்துபோயிருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிவப்பு என்றாலே அது யுஐனுளு இனை குறிக்கும் நிறமாக மாறிவிட்டது. டிசெம்பர் மாதம் முதலாம் திகதி அனைவரும் அறிந்த , மிகவும் பயங்கரமான ஒரு ஆட்கொல்லி நோயை நினைவுப்படுத்தும் நாள். எங்கு? , எப்போது ? , எப்படி? உருவானது என்ற வரலாற்றை கொண்டிராத குறித்த நோய் 1981 ம் ஆண்டில்தான் முதலாவதாக அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதன் தாக்;கம் பெரியளவில் பேசப்படாத போதிலும் , இன்று உலகையே அச்சுறுத்தும் வகையில் விஸ்வரூபமெடுத்து காணப்படுகின்றது. ஆரம்பகாலங்களில் ஒரு சிலரின் உயிரை மட்டுமே குடிக்க ஆரம்பித்த நோய் , காலம் செல்லச் செல்ல அதன் தாகத்தை தீர்த்துக்கொள்ள பலரின் உயிர்களை குடிக்கத் தொடங்கியது. இதுவரை காலமும் குறித்த நோய் காரணமாக 25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் மாத்திரம் 1.8 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 33.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தற்போது நோய் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் காணப்படுகின்றனர். மேலும் வருடாந்தம் 2.7 மில்லியன் பேர் எச்.ஐ.வி வைரசினால் தாக்கப்படுகின்றனர். 2 மில்லியன் மக்கள் வருடாந்தம் எயிட்ஸ் நோய் காரணமாக மரணமடைகின்றனர். இலங்கையில் 1987 ஆம் ஆண்;டு முதலாவது எயிட்ஸ் நோயாளி இனங் காணப்பட்டார். இலங்கையில் இதுவரை ஆயிரத்து 255 பேர் எச்.ஐ.வி. வைரசினால் தாக்கப்பட்டுள்ளனர். 332 பேருக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது. எச்.ஐ.வி. வைரஸ் தாக்கியோரில் 518 பேர் பெண்களென சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 15 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் 35 பேருக்கும் எச்.ஐ.வி. வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. (AIDS) என்பதன் பொருள் (ACQUIRED IMMUNE DEFICIENCY SYNDROMS). இதன் உருவாக்கத்திற்கு காரணம் ர் ஐ ஏ எனப்படும் ஒரு வகை வைரஸ். இந்த வைரஸ் உடலிலுள்ள நோய் எதிர்ப்புக் கலங்களை சேதமடையச்செய்து அவற்றின் தொழிற்பாடுகளை குறைவடையச்செய்யும். இதனால் நோய்த்தொற்றுகள் இலகுவில் உடலைத் தாக்கும். ர் ஐ ஏ தொற்று நன்றாக விருத்தியடைந்த நிலையே யுஐனுளு எனப்படுகின்றது.
ஒன்றின் பொருள் உடனே புரிந்துவிடுமெனில் அது சுவாரஸ்யமற்றுப்போய்விடும்.
உலகில் இடம்பெறும் விசித்திரமான அனைத்து நிகழ்வுகளும் அடுத்து இடம்பெறப்போகும் ஏதோவொன்றை உணர்த்தவே முற்படுகின்றன. ஒன்றின் பொருள் உடனே புரிந்துவிடுமெனில் அது சுவாரஸ்யமற்றுப்போய்விடும். அவ்வாறே உலகின் அனைத்து விசித்திரங்களும் இடம்பெறுகின்றன. எனினும் இறைவனின் படைப்பில் உருவாக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் ஏதோவொரு சக்தியை கொண்டனவாகவே காணப்படுகின்றன. அதில் ஆறறிவு படைத்த மனிதனே முதலாம் இடம் என தனக்குத் தானே புகழாரம் சூட்டிக்கொள்கின்றான். ஆனால் அவனிலும் பார்க்க உலகிலுள்ள பல உயிரினங்கள் அறிவில் உயர்ந்தவையாகவும் , எதிர்காலத்தை புரிந்துகொள்ளக்கூடியனவாகவும் உள்ளன என்றால் அதனை யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவ்வாறுதான் எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் எதையோ ஒன்றை உணர்த்தி நேற்று இலங்கையின் மட்டக்களப்பிலுள்ள கல்லடி பாலத்திற்கு கீழான பகுதியில், ஆயிரக்கணக்கான பாம்புகள் ஊர்வலம் சென்றுள்ளன. நேற்று இரவு 08.30 மணியளவில் (30.11.2010) 4 அடி நீளம் கொண்ட பாம்புகள் வாவியில் நீந்திச்சென்றுள்ளன. அதனை பார்வையிட ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். எதனை உணர்த்த இவை ஊர்வலம் சென்றனவோ? இறைவன் அறிவான் உண்மை. எனினும் மழை காரணமாக பாம்புகள் பாலத்தின் கீழ் வந்திருக்கலாமென, பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர். பாம்புகளின் ஊர்வலம் நன்மையில் முடியுமெனில் சந்தோஷப்படத்தக்கது. ஆனால் தடுமாறும் மனம் தடுமாறிக்கொண்டுதான் இறுக்கின்றது. காரணம் கடந்த 2004 ம் ஆண்டு இவ்வாறு பாம்புகளின் ஊர்வலத்தை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட சுனாமி தாக்கம் ஏற்பட்டது அனைவரின் நினைவிலிருந்தும் மறந்துபோகவில்லை......
Tuesday, November 30
யார் காரணம்??????????
![]() |
| இளமைக்கால நினைவுகள் |
கதிரவன் கரங்கள் தன் மேனியைத் தழுவ - மெல்லிய
காற்றும் கொஞ்சம் கருணையோடு
அருகே வந்து ஆறுதல் கூற
முற்களும் கூரான கற்களும் படர்ந்துள்ள – அந்த
குப்பை மேட்டின் நடுவே -ஒரு சிவப்பு மலர்
புலுதியில் புரலக் கண்டேன்
அதிகாலை கண்விழித்து
அர்ச்சகரின் வருகைக்காய் காத்திருந்து
ஈசனவன் பாதம் தனில் தன்னையும் - ஓர்
அடிமையாய் அர்ப்பணித்து
சத்திய ரூபன் அவனிடம் சரணாகதி அடைவதோ?
இல்லை இளங்கோவனின் மாதவிபோல்
நளினமான பெண்ணொருத்தி – தன்
மெல் விரலால் உன்னைப் பறித்து – அவள்
உச்சியிலே ஆரம்பித்து , முட்டி வரை படர்ந்திருக்கும்
கருங்கூந்தல் கோபுரத்தின் தீபமாய் - ஏற்றிவைக்க
அவள் அழகோடு ஒன்றிணைந்து
அகிலத்தை ஆண்டு பின்
மோட்ச பதம் காண்பதோ?
எதனை இலட்சியமாய் மனதில் கொண்டு
இந்த மழலை மலர் மண்ணுலகில் உதித்ததோ?
இன்று யாரிழைத்த பிழையோ?
முற்பிறப்பு வினையோ?
புலுதியில் வீழந்தது.
சின்னஞ் சிறு மலரே உனக்காக கவி வடிக்க – நான்
உவமை ஒன்றை தேடினேன்.
சிந்தனைக்கு எதுவும் சிக்கவில்லை.
சில நொடிகள் - உன்
துயரத்தின் முழு உருவையும்
கண்களில் சுமந்தபடி கண்கலங்கி நின்றபோது
அந்தக் கண்ணீரின் சிறு துளிகளிலே பட்டுத்தெரித்தது- என்
இளமைக்கால நினைவுகள்........
ஆம். உனக்கு உவமை நானே..........
மறைந்தாலும் என் நினைவில் நீ மட்டுமே
என்னுள் எனக்காய் துடிக்கும் இதயம் கூட
ஒரு நாளில் ஓய்ந்துவிடும்.
என் அன்னையவள் அன்பு மட்டுமே
நான் மறைந்த பின்னும் என் நினைவுகளை
சுமந்து நிற்கும்...............
Tuesday, November 23
நட்பின் நாடகம்
பழகிய நாள் முதல் -பல வித பாவங்களில்
புரிந்துகொள்ள முடியவில்லை - என்னுயிர் தோழிகளை
வாழ்க்கை நாடகத்தில் தங்களுடைய பாத்திரத்தை
அனைவரும் செவ்வனே நிறைவேற்றுகின்றனர் .....
என்னைத் தவிர............
புரிந்துகொள்ள முடியவில்லை - என்னுயிர் தோழிகளை
வாழ்க்கை நாடகத்தில் தங்களுடைய பாத்திரத்தை
அனைவரும் செவ்வனே நிறைவேற்றுகின்றனர் .....
என்னைத் தவிர............
வயிற்றில் பாம்மைச் சுமந்த பெண்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் இருந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப்பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப்போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினார்கள். அதேவேளை பாடரிசியா வலியால் துடித்ததுமல்லாது உட்கொண்ட உணவை வாந்தி எடுத்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. இதைப்பார்த்து குழம்பிய டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடிவு செய்து, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாடரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.
உடனடியாக பாடரிசியவுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டனர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த அந்தப் பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடியே வெளியே வந்தது. இதைப் பார்த்த நேர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அந்தப் பாம்பு குட்டியாக இருந்தபோதே பாடரிசியாவின் குடலுக்குள் புகுந்து, பாடரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உண்டு அதுவும் வளர்ந்திருக்கலாம். எப்படி அந்தப் பாம்பு பாடரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாடரிசியா சுற்றுலாச் சென்றவேளை ஆற்றுநீரை அள்ளிக் குடித்திருக்கிறார்.
அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் சென்று பொரித்து வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாடரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு வெள்ளை நிறமாகவும் , 1.83 மீற்றர் நீளமாகவும் உடலில் கறுப்புப் பட்டைகளுடனும் காணப்பட்டது.
ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது.
அதைப் பொறுக்கமுடியாமல் அவர் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்து போனார். பின்னர் அவரைச் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்துவிட்டனர். சில நாட்கள் கழித்து அந்தப் பெட்டிக்குள் இருந்து ஒரு பெரிய பாம்பு வெளியே வந்தது. அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என பின்பு தெரிய வந்தது.
இதேபோல 1642 இல் ஜேர்மனியைச் சேர்ந்த காத்ரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாகும். இந்நிலையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, ஆரோக்கியம் மேம்பட்ட இந்த நவீன காலத்தில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியே வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tuesday, November 16
வெற்றி தோல்வியின்றி இந்தியா, நி- சிலாந்து
இந்திய மற்றும் நிய+சிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்;ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நிய+சிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி தங்களது , முதலாவது இனிங்சிற்காக 350 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. அணி சார்பாக டிம் மெக்கின் டொஷ் 102 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் சகீர்கான் ஹர்பஜன்சிங் ஆகியோர் தலா 4 விக்கட்டுகளை வீழத்தினர.; தொடர்ந்து தங்களது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து , 472 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
அணிசார்பாக ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நிய+சிலாந்து அணியின் பந்துவீச்சி;ல் டேனியல் விட்டோரி 5 விக்கட்;டுகளையும் , டிம் சவுத்தி 3விக்கட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து தங்களது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நிய+சிலாந்து அணி , 8 விக்கட்;டுகளை இழந்து ,48 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தி ,இந்திய அணிக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கொடுத்தது. நிய+சிலாந்து அணி சார்பாக பிரேன்டன் மெக்கலம் 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதனடிப்படையில் 327 எனும் வெற்றி இலக்கை நோக்கி , துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி விக்கட் இழப்பின்றி 68 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போட்டி நிறைவுக்கு வந்தது. இந்திய அணி சார்பாக வீரேந்திர செவாக் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனடிப்படையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஏற்கனவே இடம்பெற்ற ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், இப்போட்டியும் சமநிலையில் முடிவடைந்திருக்கும் நிலையில் மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போடடி எதிர்வரும் 20 ம் திகதி இடம்பெறவுள்ளது. போட்டியில் ஆட்டநாயகனாக நிய+சிலாந்து அணியின் பிரென்டன் மெக்கலம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணிசார்பாக ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நிய+சிலாந்து அணியின் பந்துவீச்சி;ல் டேனியல் விட்டோரி 5 விக்கட்;டுகளையும் , டிம் சவுத்தி 3விக்கட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து தங்களது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நிய+சிலாந்து அணி , 8 விக்கட்;டுகளை இழந்து ,48 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தி ,இந்திய அணிக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கொடுத்தது. நிய+சிலாந்து அணி சார்பாக பிரேன்டன் மெக்கலம் 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதனடிப்படையில் 327 எனும் வெற்றி இலக்கை நோக்கி , துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி விக்கட் இழப்பின்றி 68 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போட்டி நிறைவுக்கு வந்தது. இந்திய அணி சார்பாக வீரேந்திர செவாக் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனடிப்படையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஏற்கனவே இடம்பெற்ற ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், இப்போட்டியும் சமநிலையில் முடிவடைந்திருக்கும் நிலையில் மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போடடி எதிர்வரும் 20 ம் திகதி இடம்பெறவுள்ளது. போட்டியில் ஆட்டநாயகனாக நிய+சிலாந்து அணியின் பிரென்டன் மெக்கலம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கை பாதை
வாழ்க்கையின் பாதை , பலவிதமான மாற்றங்களுடன் ...........
ஏறிவந்த பாதை , பல ஏற்றத்தாழ்வுகளுடன்...........
நினைத்து அழ நேரமிருந்தும் , படுத்து அழ மடியின்றி............
வாழ்நாட்களின் பாரம் சுமக்க முடியாமல் , நாட்கள் நகர்கின்றன..............
Saturday, October 9
தொடரை வெல்லுமா இந்தியா?
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பொண்டிங், வட்சன் அரை சதம் அடித்து, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 285 ஒட்டங்கள் எடுத்து இருந்தது. பந்துவீச்சில் இந்தியாவின் ஹர்பஜன் இரண்டு விக்கெட் வீழ்த்தி ஆறுதல் தந்தார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் டெஸ்டில், வென்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று பெங்களூருவில் துவங்கியது.நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி தலைவர் பொண்டிங் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இந்திய அணியில் முதல் டெஸ்டில் இடம் பெற்றிருந்த காம்பிர், லட்சுமண், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்குப் பதிலாக தமிழகத்தின் முரளி விஜய், ஸ்ரீசாந்த் மற்றும் அறிமுக வீரராக சத்தீஸ்வர் புஜாரா இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் போலிஞ்சர் நீக்கப்பட்டு, பீட்டர் ஜார்ஜ் அறிமுகம் ஆனார். ஆஸ்திரேலிய அணிக்கு வட்சன், காடிச் இருவரும் துவக்கம் கொடுத்தனர். வழக்கம் போல காடிச் நிதானமாக துவங்க, மறுமுனையில் வட்சன் , ஸ்ரீசாந்தின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஒட்டங்கள் அடித்து அதிரடியை வெளிப்படுத்தினார். அபார ஆட்டத்தை தொடர்ந்த வட்சன் , ஓஜாவின் பந்தில் நான்கு ஒட்டம் அடித்து, 11வது அரைசதம் கடந்தார்.
இந்திய அணியில் முதல் டெஸ்டில் இடம் பெற்றிருந்த காம்பிர், லட்சுமண், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்குப் பதிலாக தமிழகத்தின் முரளி விஜய், ஸ்ரீசாந்த் மற்றும் அறிமுக வீரராக சத்தீஸ்வர் புஜாரா இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் போலிஞ்சர் நீக்கப்பட்டு, பீட்டர் ஜார்ஜ் அறிமுகம் ஆனார். ஆஸ்திரேலிய அணிக்கு வட்சன், காடிச் இருவரும் துவக்கம் கொடுத்தனர். வழக்கம் போல காடிச் நிதானமாக துவங்க, மறுமுனையில் வட்சன் , ஸ்ரீசாந்தின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஒட்டங்கள் அடித்து அதிரடியை வெளிப்படுத்தினார். அபார ஆட்டத்தை தொடர்ந்த வட்சன் , ஓஜாவின் பந்தில் நான்கு ஒட்டம் அடித்து, 11வது அரைசதம் கடந்தார்.
முதல் விக்கெட்டுக்கு 99 ஒட்டங்கள் சேர்த்த நிலையில், 43 ஒட்டங்கள் எடுத்த காடிச், ஹர்பஜன் பந்தில் சிக்கினார். திறமையாக விளையாடிக் கொண்டிருந்த வட்சனை (57), பிரக்யான் ஓஜா வெளியேற்றினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கிளார்க்கை (14), ஹர்பஜன் திருப்பி அனுப்பினார். அடுத்து பொண்டிங், ஹசி ஜோடி சேர்ந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். இந்நிலையில் ஹசி (34,) ஜாகிர் வேகத்தில் வீழ்ந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டிங், சர்வதேச டெஸ்ட் அரங்கில், 54வது அரைசதம் கடந்தார். இந்தியாவுக்கு எதிராக இது 8வது அரைசதம் ஆகும். இவர் ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரெய்னாவின் பந்தில் அவுட்டானார். பின் நோர்த்தும், பெய்னும் இணைந்து மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 285 ஒட்டங்கள் எடுத்திருந்தது. நோர்த் 43, பெய்ன் ஒட்டங்களுடன் ஆட்டமிழக்காகாமல் களத்தில் இருந்தனர். இந்தியா சார்பில் ஹர்பஜன் சிங் 2, ஜாகிர் கான், பிரக்யான் ஓஜா, ரெய்னா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வெல்லலாம் எண்ட முனைப்புடன் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் முயற்சியில் ஆஸ்திரேலிய அணியும் விளையாடுகின்றன. முடிவை பொறுத்திருந்து பார்ப்போம். இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.
Friday, September 24
பதிவுலக நண்பர்களுக்கு மறுபடியும் வணக்கம்
கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக wordpress இல் பதிவு எழுதி வந்த நான் இன்று blogger முதல் இல் தொடர போகின்றேன், உங்கள் அனைவரது ஆதரவையும் எதிர் பார்க்கிறேன்.
அன்புடன்,
விஜி
முதல் பதிவாக இன்று வாசித்த லேட்டஸ்ட் சினிமா செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்கின்றேன்.
அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆகும் விஜய்
வெயில் வந்தா பகலு, லைட்டு போட்டா நைட்டுன்னு ஒரு சவசவ வாழ்க்கையை சில ஹீரோக்கள் அனுபவித்துக் கொண்டிருக்க, ஒவ்வொரு மணித்துளியையும் லட்சங்களாக்கிக் கொண்டிருக்கிறார் விஜய். நோ ரெஸ்ட். அடுத்தடுத்த படங்களுக்கு கதை கேட்பதிலும் அது பிடித்திருந்தால் சம்பளம் பேசி லாக்கரை நிரப்பிக் கொள்வதுமாக ரொம்பவே பிராக்டிகல்! இத இத இத இததான் எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்களும்.
விஜய்யின் லேட்டஸ்ட் கமிட்மென்ட் என்ன தெரியுமா? விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிப் போட்டிருப்பதுதான். யாவரும் நலம் என்ற படத்தையடுத்து தமிழில் ஒரு சிறப்பான படத்தை இயக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் இந்த விக்ரம். இவருக்கு தோதாக வந்து சிக்கினார் சீயான் விக்ரம். இருவரும் இணைந்து 24 என்ற படத்தை உருவாக்க திட்டமிட்டார்கள். இதில் என்ன ஏழரையோ? புராஜக்ட்டின் துவக்க நிலையிலேயே கட்டை குறுக்கே விழுந்து திட்டமே பணால்.
இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்திற்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார் விஜய். அவர் அனுப்பி முதலில் கதை கேட்ட விஜய் பிடிக்கல என்று அனுப்பிவிட்டார். அதன் பின் வேறு கதையோடு சில தினங்களுக்கு முன் வந்து அசத்தினாராம் விக்ரம் குமார். முழுக்க முழுக்க திருப்தியான விஜய் ரத்னம் தரப்பிலிருந்து அட்வான்சும் வாங்கிக் கொண்டார். இதுதான் துவக்க நிலை என்றாலும் பி.சி.ஸ்ரீராம் இப்படத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று அனைவரும் கூடி முடிவெடுத்திருக்கிறார்கள். அவரும் சம்மதித்திருக்கிறாராம்.
Subscribe to:
Posts (Atom)


















