Tuesday, November 16

வெற்றி தோல்வியின்றி இந்தியா, நி- சிலாந்து

இந்திய மற்றும் நிய+சிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்;ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நிய+சிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி தங்களது , முதலாவது இனிங்சிற்காக 350 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. அணி சார்பாக டிம் மெக்கின் டொஷ் 102 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் சகீர்கான் ஹர்பஜன்சிங் ஆகியோர் தலா 4 விக்கட்டுகளை வீழத்தினர.; தொடர்ந்து தங்களது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து , 472 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
அணிசார்பாக ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நிய+சிலாந்து அணியின் பந்துவீச்சி;ல் டேனியல் விட்டோரி 5 விக்கட்;டுகளையும் , டிம் சவுத்தி 3விக்கட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து தங்களது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நிய+சிலாந்து அணி , 8 விக்கட்;டுகளை இழந்து ,48 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தி ,இந்திய அணிக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கொடுத்தது. நிய+சிலாந்து அணி சார்பாக பிரேன்டன் மெக்கலம் 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதனடிப்படையில் 327 எனும் வெற்றி இலக்கை நோக்கி , துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி விக்கட் இழப்பின்றி 68 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போட்டி நிறைவுக்கு வந்தது. இந்திய அணி சார்பாக வீரேந்திர செவாக் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனடிப்படையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஏற்கனவே இடம்பெற்ற  ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன்,  இப்போட்டியும் சமநிலையில் முடிவடைந்திருக்கும் நிலையில் மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போடடி எதிர்வரும் 20 ம் திகதி இடம்பெறவுள்ளது. போட்டியில் ஆட்டநாயகனாக நிய+சிலாந்து அணியின் பிரென்டன் மெக்கலம் தெரிவாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment