உலகில் இடம்பெறும் விசித்திரமான அனைத்து நிகழ்வுகளும் அடுத்து இடம்பெறப்போகும் ஏதோவொன்றை உணர்த்தவே முற்படுகின்றன. ஒன்றின் பொருள் உடனே புரிந்துவிடுமெனில் அது சுவாரஸ்யமற்றுப்போய்விடும். அவ்வாறே உலகின் அனைத்து விசித்திரங்களும் இடம்பெறுகின்றன. எனினும் இறைவனின் படைப்பில் உருவாக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் ஏதோவொரு சக்தியை கொண்டனவாகவே காணப்படுகின்றன. அதில் ஆறறிவு படைத்த மனிதனே முதலாம் இடம் என தனக்குத் தானே புகழாரம் சூட்டிக்கொள்கின்றான். ஆனால் அவனிலும் பார்க்க உலகிலுள்ள பல உயிரினங்கள் அறிவில் உயர்ந்தவையாகவும் , எதிர்காலத்தை புரிந்துகொள்ளக்கூடியனவாகவும் உள்ளன என்றால் அதனை யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவ்வாறுதான் எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் எதையோ ஒன்றை உணர்த்தி நேற்று இலங்கையின் மட்டக்களப்பிலுள்ள கல்லடி பாலத்திற்கு கீழான பகுதியில், ஆயிரக்கணக்கான பாம்புகள் ஊர்வலம் சென்றுள்ளன. நேற்று இரவு 08.30 மணியளவில் (30.11.2010) 4 அடி நீளம் கொண்ட பாம்புகள் வாவியில் நீந்திச்சென்றுள்ளன. அதனை பார்வையிட ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். எதனை உணர்த்த இவை ஊர்வலம் சென்றனவோ? இறைவன் அறிவான் உண்மை. எனினும் மழை காரணமாக பாம்புகள் பாலத்தின் கீழ் வந்திருக்கலாமென, பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர். பாம்புகளின் ஊர்வலம் நன்மையில் முடியுமெனில் சந்தோஷப்படத்தக்கது. ஆனால் தடுமாறும் மனம் தடுமாறிக்கொண்டுதான் இறுக்கின்றது. காரணம் கடந்த 2004 ம் ஆண்டு இவ்வாறு பாம்புகளின் ஊர்வலத்தை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட சுனாமி தாக்கம் ஏற்பட்டது அனைவரின் நினைவிலிருந்தும் மறந்துபோகவில்லை......

உண்மைதான்..ஆனால் மீண்டும் அப்படியொரு துயரம் எம் மக்களை அணுகாமல் இருக்க எல்லோருக்கும் பொதுவான இறைவன் கருணைபுரியவேண்டும். ஆனவரை அனுபவித்தாகிவிட்டது...இனியும் ஒரு துயர் நினைத்தும் பார்க்கமுடியாதுள்ளது.
ReplyDelete